வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும்
ஏசும்
வையகம் இதுதானடா
விழுந்தாரை கண்டால் வாய்விட்டு
சிரிக்கும்
வாழ்ந்தரை கண்டால் மனதுக்குள்
வெறுக்கும்
இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும்
இருப்பவர் கேட்டால் நடிப்பென
மறுக்கும்
பண்பாடு இன்றி பாதகம் செய்யும்
பணத்தாலே யாவும் மறைத்திட
நினைக்கும்
குணத்தோடு வாழும் குடும்பத்தை
அழிக்கும்
குணம் மாரி நடந்தே பகைமையை
வளர்க்கும்
படம் - நான்பெற்றசெல்வம்
பாடலாசிரியர்- ஷரீப்
No comments:
Post a Comment